விவசாயம்

சிறு/குறு விவசாயி சான்றிதழ் ஆன்லைனில் பெறுவது எப்படி?| How to Get Small / Marginal Farmer Certificate

சிறுகுறு விவசாயி சான்றிதழ் ஆன்லைனில் பெறுவது எப்படி How to Get Small Marginal Farmer Certificate
சிறுகுறு விவசாயி சான்றிதழ் ஆன்லைனில் பெறுவது எப்படி How to Get Small Marginal Farmer Certificate

மத்திய அரசு விவசாயிகளுக்கு பல சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. இதில் சிறு/குறு விவசாயி சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு சொட்டு நீர் பாசனம், ஆழ்துளை கிணறு, தெளிப்பு நீர் பாசனம் போன்றவை இலவசமாக பெறலாம். தோட்டக்கலை சார்ந்தவர்களுக்கு யூரியா(Urea), பொட்டாசியம்(Potassium) மற்றும் விதைகளை மானியம் மூலம் பெற வாய்ப்பு உள்ளது.

இந்த சான்றிதழை ஆன்லைன் மூலம் எப்படி பெறுவது என்பதை பற்றி இங்கே பார்ப்போம்:

சிறு/குறு விவசாயி சான்றிதழ் தகுதி:

நில உரிமை:

  • விண்ணப்பிக்கும் விவசாயியின் நிலம் 5 ஏக்கருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • உங்களிடம் எத்தனை சர்வே எண்கள் இருந்தாலும், அவற்றை ஒன்றாக சேர்த்துக்கொள்ளலாம்.
  • சிட்டா யாருடைய பெயரில் இருக்கிறதோ அவர்களுடைய பெயரில் மட்டுமே சான்றிதழ் பெற முடியும்.
  • சிட்டா வைத்திருப்பவர் இறந்துவிட்டால், மனைவி அல்லது பிள்ளைகள் இறப்பு சான்றிதழ்(Death Certificate) சமர்ப்பித்து சான்றிதழ் பெறலாம்.
  • நிலம் கூட்டு பட்டாவாக இருந்தால், VAO-விடம் தங்களுக்கு எவ்வளவு இடம் இருக்கிறது என்று அடங்கல் சான்றிதழ் (villangam certificate) பெற வேண்டும்.
  • கூட்டு பட்டாவாக இருந்தால், EC சான்றிதழ் அல்லது பத்திரம் இரண்டில் ஒன்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

பிற தகுதிகள்:

  • விவசாயத்தில் ஈடுபட்டு வருவதை நிரூபிக்க வேண்டும்.
  • விவசாயம் தான் முதன்மை தொழில் என்பதை நிரூபிக்க வேண்டும்.
  • வேறு எந்த அரசு சலுகைகளையும் பெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

சிறு/குறு விவசாயி சான்றிதழ் பெறுவதன் நன்மைகள்:

  • அரசின் பல்வேறு மானியங்களை பெறலாம்.
  • வங்கிகளில் கடன் பெறுவதில் எளிமை.
  • வேளாண்மை இடுபொருட்களுக்கு மானியம் பெறலாம்.
  • பயிர் காப்பீட்டு திட்டங்களில் சேரலாம்.

சிறு/குறு விவசாயி சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை(Aadhar Card)
  • நில சிட்டா (Land Citta)
  • புகைப்படம்
  • சாதி சான்றிதழ் (Community Certificate)
  • வருமான சான்றிதழ் (Income Certificate)
  • வங்கி கணக்கு விவரம் (Bank Statement)

சிறு/குறு விவசாயி சான்றிதழை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

  1. TNeGA வலைத்தளத்திற்கு செல்லவும்: https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx
  2. உள்நுழையவும் (பயனர் கணக்கு இல்லையென்றால் புதியது உருவாக்கவும்)
  3. Services > Revenue Department > REV-117 Small / Marginal Farmer Certificate
  4. ‘Proceed’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. குடிமகன் கணக்கு எண்ணை (CAN) உள்ளிடவும்.
  6. கைபேசி எண் அல்லது ஆதார் எண் உள்ளிட்டு தேடவும்.
  7. CAN எண்ணை கிளிக் செய்யவும்.
  8. ஆதார் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு OTP பெறவும்.
  9. OTP ஐ உள்ளிட்டு ‘Conform OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  10. ‘Proceed’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  11. 1 முதல் 9 வரையிலான விவரங்களை உள்ளிட்டு ‘Add’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  12. ஒன்றுக்கும் மேற்பட்ட நிலங்கள் இருந்தால் ஒவ்வொன்றாக ‘Add’ செய்யவும்.
  13. ‘Submit’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  14. ‘Download Self declaration form’ ஐ பதிவிறக்கம் செய்து, கையொப்பமிட்டு ஸ்கேன் செய்யவும்.
  15. புகைப்படம் மற்றும் சிட்டாவை பதிவேற்றவும்.
  16. ‘Make Payment’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  17. ‘I agree’ என்பதை தேர்ந்தெடுத்து ‘Make Payment’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  18. விருப்பமான பணம் செலுத்தும் முறையை தேர்ந்தெடுக்கவும்.
  19. கட்டணம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதும், ஒப்புகை பக்கம் தோன்றும்.
  20. ‘Check Status’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  21. விண்ணப்ப தேதியை உள்ளிட்டு நிலையை பார்க்கவும்.
  22. ‘Current Status’ ல் ‘Application Approved’ காணப்பட்டால் ‘Download certificate’ ஐ கிளிக் செய்து சான்றிதழை பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் படிக்க:

சிறு/குறு விவசாயி சான்றிதழ் பெற பதிவுக் கட்டணம் என்ன?

சிறு/குறு விவசாயி சான்றிதழை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவதற்கு, ரூ.60 விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

பயனுள்ள இணைப்புகள்:

Shares:

Related Posts

Nothing Found! Ready to publish your first post? Get started here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *