அரசு சேவைகள்

பட்டா பெயரை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? | How To Apply Patta Name Transfer Online?

How To Apply Patta Name Transfer Online?

Patta Name Transfer என்பது ஒரு சொத்தின் உரிமையாளரின் பெயரை பட்டாவில் மாற்றும் செயல்முறையாகும். ஒருவர் ஒரு நிலத்தை வாங்கும் போது, அந்த நிலத்தின் பழைய உரிமையாளரின் பெயரில் உள்ள பட்டாவை, புதிய உரிமையாளரின் பெயரில் மாற்ற வேண்டும். இந்த செயல்முறையை ஆன்லைனில் செய்யலாம்.

பட்டா மாறுதலுக்கான ஆவணங்கள்

Patta Name Transfer எவ்வாறு நடைபெறுகிறது?

நாம் சர்ப்பதிவாளர் மூலம் பதிவு செய்த பின் சம்மந்த பட்டா அலுவலருக்கு பட்டா மறுதலுக்கான விண்ணப்பம் இணைய வழியாக சென்றடையும். இந்த மாறுதல் இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்.

உட்பிரிவு செய்தல்:

  • நில அளவு 80 செண்ட் என்று வைத்து கொள்ளலாம் (சர்வே எண்/உட்பிரிவு: 82/6A).
  • நிலத்தின் சர்வே எண் உட்பிரிவு 82/6A1 மற்றும் 82/6A2 என்று இரண்டாக பிரிக்கப்படும்.
  • சர்வே எண் உட்பிரிவு ஒன்று தங்களுக்கு பட்டா மாறுதல் செய்து தரப்படும்.

உட்பிரிவு செய்யாமல் பட்டா மாற்றம் செய்தல்:

  • நில அளவு 20 செண்ட் (சர்வே எண்/உட்பிரிவு: 81/5A).
  • உட்பிரிவு இல்லாமல் பட்டா மாற்றம் செய்தல்.
  • உங்கள் மானு விண்ணப்பம் கிராம நிர்வாகி அலுவலர்-க்கு (VAO) இணைய வழியாக சென்றடையும், 15 நாட்களுக்குள் உங்கள் பட்டா மறுதலுக்கான மனுவை செயல்முறை படுத்துவார்கள் கிராம நிர்வாகி அலுவலர்-க்கு (VAO).

பின்பு, வட்ட வழங்கல் அதிகாரி ஒரு முறை சரிபார்த்து பின்பு உங்களுக்கு பட்டா மாற்றம் செய்து தருவார்கள்.

Read Also: பட்டா சிட்டா ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Land Patta Sitta Online

Patta Name Transfer விண்ணப்பம்

பட்டா மாறுதலுக்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசின் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பத்தை பதிவு செய்ய பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:

  • https://eservices.tn.gov.in/ இணையதளத்தில் உள்நுழையவும்.
  • Patta Transfer” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • விண்ணப்பதாரரின் தகவல்களை உள்ளிடவும்.
  • பத்திரம் மற்றும் இதர ஆவணங்களை ஸ்கேன் செய்து சமர்ப்பிக்கவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.

Patta Name Transfer விண்ணப்பத்தின் நிலையை சரிபார்ப்பது

பட்டா மாறுதல் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்க, பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:

  • தமிழ்நாடு அரசு இணையதளத்தில் (https://eservices.tn.gov.in/) உள்நுழைக.
  • ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கிற இரண்டு மொழிகளில் ஏதாவது ஒன்று தேர்வு செய்யவும்.
  • விண்ணப்ப நிலை என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • விண்ணப்ப எண் மற்றும் அங்கீகார மதிப்பை (CAPTCHA) உள்ளீடு செய்து சமர்ப்பி(Submit) பொத்தானைக் கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தை நிலையை சரிபார்த்துக் கொள்ளவும்.

கேள்வி பதில் பகுதி (FAQs)

Patta Name Transferக்கு எவ்வளவு கட்டணம் ஆகும்?

பட்டா மாறுதலுக்கான கட்டணம் ₹60 ஆகும். உட்பிரிவு செய்யப்பட்டால், கூடுதலாக ₹400 கட்டணம் செலுத்த வேண்டும்.

Patta Name Transfer பெற எவ்வளவு காலம் ஆகும்?

பட்டா மாறுதலுக்கான காலம் 15 முதல் 30 நாட்கள் ஆகும்.

Patta Name Transfer தொடர்பான சந்தேகங்களுக்கு என்ன செய்வது?

பட்டா மாறுதல் தொடர்பான சந்தேகங்களுக்கு, உங்கள் தாலுகா அலுவலகத்தை அணுகவும்.

முடிவுரை

Patta Name Transfer விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டதும், அது சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பப்படும். தாலுகா அலுவலகம் விண்ணப்பத்தை பரிசீலித்து, பட்டா மாறுதலுக்கான அனுமதி வழங்கும். அனுமதி வழங்கப்பட்டவுடன், பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்படும். இந்தக் கட்டுரையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும். நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.

Shares:

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *